பாபர் சாப்புக்கு போவதை போலவே சஜித் பக்கம் செல்கின்றனர் – எந்த கள்வனும் சேரலாம்

338

ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஆசிகளை பெற்றுக்கொள்ள அண்மையில் மிஹிந்தலை ரஜமஹா விகாரைக்கு சென்ற நிலையில் அங்கிருந்த விகாராதிபதி வளவாஹங்குனவவே தம்மரத்ன தேரர் சில அறிவுரைகளை அவர்களுக்கு வழங்கினார்.

“நாட்டில் சுதந்திரம் இல்லை நாட்டு மக்களுக்கு சுதந்திர தினத்தை கொண்டாடும் அளவுக்கு சகல பிளேன்களும் மேலால் சென்றன. கப்பல்களை கொண்டுவந்தார்கள். வாகனங்களை கொண்டு வந்தார்கள். படைகளை நிறுத்தினார்கள். எனவே இது தலைக்கனத்தில் செய்த விடயம்தான். கடன் கடனெடுத்துதான் கடலை பார்த்து சுடுகின்றனர்.

அந்த குற்றச்சாட்டை எங்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாது. ஜனாதிபதி பொகட்டுவ பக்கமே உள்ளார்” ரஞ்சித் மத்தும பண்டார.

“2010 ஆம் ஆண்டு பொன்சேகாவின் பணத்தை நீங்கள் கைமாற்றிக்கொள்ளவில்லையா?” வளவாஹங்குனவவே தம்மரத்ன தேரர்

“இல்லை நாங்கள்….” ரஞ்சித் மத்தும பண்டார.

“உங்களுடைய தலைவர் சலூன் கதவு திறந்துள்ளது என்று சொல்கின்றார் அல்லவா? அந்த சலூன் கடையால்தான் இந்த நாட்டுக்கு இடி விழுந்தது.” வளவாஹங்குனவவே தம்மரத்ன தேரர்

“இல்லை இல்லை எங்கள் சலூன் கதவு நல்லவர்களுக்கு மட்டுமே திறந்துள்ளது” ரஞ்சித் மத்தும பண்டார.

“இல்லையே அந்த கல்லகோஷ்டி அப்படியே உங்கள் பக்கம் வருகின்றதே. பாபர் சாப்புக்கு யார் வேண்டும் என்றாலும் முடி வெட்ட வர முடியும்” வளவாஹங்குனவவே தம்மரத்ன தேரர்

இல்லை இல்லை எங்கள் சலூனுக்கு செக் பண்ணியே எடுக்கின்றோம். ரஞ்சித் மத்தும பண்டார.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here