தாய்மாமன் மகன்,மகளை திருமணம் செய்யத் தடை

1740

இந்தியாவில் முதன்முறையாக உத்தரகாண்ட் மாநில சட்டப் பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்ட பொது சிவில் சட்டத்தில் அத்தை, மாமனின் மகன் அல்லது மகளை திருமணம் செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் குற்றவியல் சட்டங்கள் மற்றும் தண்டனை சட்டங்கள் அனைத்து மதத்தினருக்கும் பொது எனவும் தனி நபர் சார்ந்த சிவில் சட்டங்கள் பல்வேறு மதத்தினருக்கும் தனித்தனியாக உள்ளது.

அனைத்து மதத்தினருக்கும் பொதுவான ஒரு சிவில் சட்டத்தை கொண்டு வருவதாக ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சி பல வருடங்களாக கூறி வருகிறது.

இந்தியா முழுவதும் பொது சிவில் சட்டத்தை (Uniform Civil Code) அமல்படுத்துவது தொடர்பில் பாரதிய ஜனதா கட்சி அரசு முயற்சித்து வருகிறது.

மேலும், மறுமணம், விவாகரத்து குறித்த பொது விதிகள் அமலுக்கு வருகின்றன.
அதேபோல், திருமணங்களைப் போன்று, லிவ்-இன் உறவில் இருக்க விரும்புவோரும் அரசிடம் பதிவு செய்து கொள்வது கட்டாயாமாகிறது. தவறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. லிவ்-இன் உறவில் இருக்க விரும்புவோரும் அரசிடம் பதிவு செய்ய தவறினால் 6 மாதம் சிறை தண்டனை மற்றும் 25,000 அபராதம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here