சீருடை – பாடப்புத்தகங்களை வழங்க 19 பில்லியன்கள் செலவு

200

இன்று வழங்கப்படும் பாடசாலை சீருடையில் 80% சீன அரசாங்கத்தின் அன்பளிப்பாகும் எனவும் எஞ்சிய 20% சதவீதம் இலங்கை அரசாங்கத்தின் செலவில் பெற்றுகொடுக்கப்பட்டதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

09 மாகாணங்களின் அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் பாடசாலை சீருடை மற்றும் பாடப்புத்தங்கள் இன்று வழங்கப்படுகின்றன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்டதன் பின்னர் கல்வித்துறையின் நான்கு பிரிவுகளை ஒரு அமைச்சின் கீழ் கொண்டு வந்து மனித வளத்தை முகாமைத்துவம் செய்து மாணவர்களுக்கு முறையான கல்வியை வழங்குவதற்கான வசதிகளை ஏற்படுத்தினார்.

இந்திய கடன் உதவியில் கிடைத்த கடதாசியை கொண்டு பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டன. அதனால் உரிய தினத்தில் பாடப்புத்தங்களை அரசாங்கத்தினால் வழங்க முடிந்துள்ளதாக கல்வி அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அரச அச்சீட்டு பணிகளில் இலாபம் ஈட்டவும் முடிந்துள்ளது. அனைத்து பாடசாலைகளினதும் மாணவர்களுக்கும் சீருடை மற்றும் பாடப்புத்தகங்களை வழங்க அரசாங்கம் 19 பில்லியன்களை செலவிடுகிறது.

 WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here