பெரும்போகத்தில் நெல் கொள்வனவிற்கு கடன் திட்டம்

236

சிறு மற்றும் மத்திய தர அரிசி ஆலை உரிமையாளர்கள், நெற் களஞ்சியசாலை உரிமையாளர்கள், தொகை நெல் சேகரிப்பாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நிவர்திக்கும் வகையில் இம்முறை பெரும்போகத்தின் போது நெல் கொள்வனவு செய்வதற்காக “மடபன” கடன் திட்டத்தை செயற்படுத்த தீர்மானித்திருப்பதாக ஜனாதிபதியின் பொதுமக்கள் அலுவல்கள் பணிப்பாளர் நாயகம் ரஜித் கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார்.

மக்கள் வங்கி, இலங்கை வங்கி மற்றும் பிரதேச அபிவிருத்தி வங்கி ஆகியவற்றினால் இந்த கடன் வசதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறு மற்றும் மத்திய தர அரிசி உற்பத்தி தொழில்துறையினர் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகள் தொடர்பில் நேற்று(14) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தரார்.

இந்த கடன் திட்டத்தின் கீழ், 09 பில்லியன் ரூபா கடன் வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு அதிகபட்சமாக 50 மில்லியன் ரூபாவும், நெற் களஞ்சியசாலை உரிமையாளர்களுக்களுக்கும் தொகை நெல் சேகரிப்பாளர்களுக்கும் அதிகபட்சமாக 25 மில்லியன் ரூபா வரை கடனாக வழங்கப்படும்.

கடன் திருப்பிச் செலுத்த 180 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும். 15% வருட வட்டி விகிதத்தில் 4% வீதம் திரைசேறியினால் அந்தந்த வங்கிகளுக்கு வழங்கப்படும். அதன்படி, கடன் பெறுநர்கள் 11% மட்டுமே வருட வட்டி செலுத்த வேண்டும்.

விவசாசியகளுக்கு நல்ல விலையை பெற்றுக்கொடுப்பதோடு, மக்களுக்கும் நியாயமான விலையில் அரிசியை பெற்றுக்கொடுப்பதே இக்கடன் திட்டத்தின் நோக்கமாகும் எனவும் ரஜித் கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார்.

பெரும்போகத்தின் அறுவடை ஆரம்பமாகும் வேலையில் விவசாயிகளுக்கு (நாடு கிலோ 105, சம்பா 120, கீரி சம்பா 130 ரூபாய் ) நிர்ணய விலையை பெற்றுக்கொடுப்பதற்காக இந்த கடன் வழங்கப்படும்.

பொருளாதார நெருக்கடி மற்றும் கொவிட் தொற்று காரணமாக சிறு மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்கள் பல நிதிப் நெருக்கடிகளை எதிர்நோக்க வேண்டியிருந்ததுடன், இதன் காரணமாக தொழில்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்தும் இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here