follow the truth

follow the truth

May, 14, 2024
HomeTOP2பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை

பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை

Published on

பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதால் இந்தியா தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளளது.

சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில் “ரோடமைன் பி” கெமிக்கல் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை ஏற்படுத்தும் நிறமி சேர்க்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து பச்சை, ஊதா உள்ளிட்ட பல்வேறு நிறங்களில் விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாய்களை சாப்பிடக்கூடாது என்று இந்திய உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தடையை மீறி பஞ்சு மிட்டாய் விற்பனை செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

யுக்ரைனில் போருக்காக சென்ற இராணுவ சிப்பாய்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

ரஷ்யா மற்றும் யுக்ரைனில் போருக்காக சென்றுள்ள இலங்கையின் ஓய்வு பெற்ற இராணுவ சிப்பாய்களின் உறவினர்கள் இன்று(14) கொழும்பில் உள்ள...

உலகின் மிகப்பெரிய விமான நிலையம்

உலகின் மிகபெரிய விமான நிலையமான துபாயின் அல் மாக்தோம் (Al Maktoum) சர்வதேச விமான நிலையத்தின் கட்டுமானப் பணிகள்...

ஒரு குடும்பத்தின் மாதாந்த நுகர்வுச் செலவு ரூ.103,283

பணவீக்கம் காரணமாக, இலங்கையில் ஒரு குடும்பத்திற்கான மாதாந்த நுகர்வுச் செலவு 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023 டிசம்பர்...