follow the truth

follow the truth

July, 27, 2024
Homeவணிகம்சகல கடன் மறுசீரமைப்புக்களும் ஜூனில் நிறைவு

சகல கடன் மறுசீரமைப்புக்களும் ஜூனில் நிறைவு

Published on

கடன் மறுசீரமைப்பே, நாடு அண்மைக்காலமாக எதிர்கொண்ட பாரிய பொருளாதார சவாலாக உள்ளதாகவும் எதிர்வரும் ஜூன் மாதமளவில் சகல கடன் மறுசீரமைப்புக்களும் முழுமையாக நிறைவுசெய்யப்படும் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

தேசிய கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், எதிர்வரும் ஜூன் மாதமளவில் அனைத்து கடன் மறுசீரமைப்பையும் முழுமையாக நிறைவு செய்வதே அரசாங்கத்தின் இலக்காகுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க, வெளிநாட்டுக் கடன் பல்தரப்பு மற்றும் இருதரப்பு கடன் என இரண்டு பிரிவாக இக்கடன் மறுசீரமைப்புக்கள் காணப்படுகின்றன. அந்தவகையில், பல்தரப்பு கடனை தொடர்ச்சியாக செலுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இரு தரப்பு வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் பேச்சுவார்த்தைகள் மிகவும் சாத்தியமான வகையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நாடுகளுக்கிடையிலான கடன் தொடர்பில் பேச்சுவார்த்தை மார்ச் மாதம் நிறைவில் பூர்த்தியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

திறமையுடனான பிணைமுறி தொடர்பிலான பேச்சுவார்த்தை ஏப்ரல் மாதமளவிலும் மற்றும் கடன் மறுசீரமைப்பு ஜூன் மாதமளவிலும் முழுமையாக நிறைவுசெய்யப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

சில அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு

சில அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைத்துள்ளதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ கிராம் உளுந்தின் விலை...

இலங்கையின் கோழி இறைச்சி சீனாவுக்கு

இந்த நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கோழி, முட்டைகள் மற்றும் அன்னாசிப்பழங்களை சீனாவிற்கு ஏற்றுமதி செய்வதற்கு நீண்டகால தடைகளை சீன...

உலக சுற்றுச்சூழல் தினத்தை உலக வர்த்தக மையத்தில் World Vision Lankaவுடன் இணைந்து கொண்டாடிய Coca-Cola அறக்கட்டளை

உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5, 2024 அன்று Coca-Cola அறக்கட்டளை மற்றும் World Vision Lanka நிறுவனம்...