காஸா போரை உடனடியாக நிறுத்துமாறு இளவரசர் வில்லியம் வலியுறுத்து

200

காஸாவில் இடம்பெற்று வரும் போரை உடனடியாக முடிவிற்குக் கொண்டு வருமாறு வேல்ஸ் இளவரசர் வில்லியம் வலியுறுத்தியுள்ளார்.

பொதுவாக அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள் அரசியல் நிகழ்வுகள் குறித்து கருத்து தெரிவிக்காமல் இருப்பது வழக்கமாக இருந்து வந்த நிலையில் காசா போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று வேல்ஸ் இளவரசர் வில்லியம் வலியுறுத்தி உள்ளார்.

நேற்று (20) செஞ்சிலுவை சங்கத்தினருடனான தனது சந்திப்பைத் தொடர்ந்து, அவர் தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளார்.

காஸாவில் மத்திய கிழக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருவதை அடுத்து இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளார்.

இந்த தாக்குதல்கள் காரணமாக பலர் கொல்லப்பட்டுள்ளமைக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

நான், மற்றவர்களை போன்றே, இந்த போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என தாமும் விரும்புவதாகவும் காஸாவிற்கு அதிகளவான மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

காசாவிற்கு மனிதாபிமான உதவிகள் அதிகளவில் தேவைப்படுகிறது. உதவிகள் அதிவேகமாக சென்றடைய வேண்டியதும், பணயக்கைதிகள் விடுவிக்கப்பட வேண்டியதும் அவசியம் ஆகும் எனவும் இளவரசர் வில்லியம் வலியுறுத்தியுள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here