இலங்கை அணிக்கு 210 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

206

ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து 209 ஓட்டங்களை பெற்றது.

ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி தற்போது இடம்பெற்று வருகிறது.

தம்புள்ளை – ரங்கிரிய மைதானத்தில் இடம்பெற்றுவரும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

ஆப்கானிஸ்தான் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் Rahmanullah Gurbaz அதிகபட்சமாக 70 ஓட்டங்களையும், Hazratullah Zazai 45 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் Matheesha Pathirana மற்றும் Akila Dananjaya ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

இந்நிலையில் இலங்கை அணிக்கு 210 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here