follow the truth

follow the truth

May, 14, 2024
Homeஉள்நாடுஹபரணை - தம்புள்ளை வீதியில் காட்டு யானைக்கு அருகில் செல்ல வேண்டாம்

ஹபரணை – தம்புள்ளை வீதியில் காட்டு யானைக்கு அருகில் செல்ல வேண்டாம்

Published on

சுற்றுலாப் பயணிகள் மற்றும் பயணிகள் காட்டு யானைகள் அருகில் செல்வது, ஆபத்தான செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு வனவிலங்கு அதிகாரிகள் கேட்டுக்கொள்கிறார்கள்.

ஹபரணை வனப்பகுதியில் சுற்றித்திரியும் காட்டு யானை ஹபரணை – தம்புள்ளை பிரதான வீதியில் சுற்றித் திரியும் போது காட்டு யானைக்கு அருகில் சென்று பல சுற்றுலாப் பயணிகள் ஆபத்தான முறையில் இருந்ததை ஒரு கேமரா மூலம் பதிவாகியுள்ளது.

வீதியின் அருகே வரும் காட்டு யானைகளுக்கு உணவளிக்கும் பழக்கம் காரணமாக குறித்த வீதியில் தினமும் காட்டு யானைகள் சுற்றித் திரிகின்றன.

இதன்போது முச்சக்கர வண்டியில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற நபர் ஒருவர் வாகனத்தை நிறுத்தி காட்டு யானையின் அருகில் சென்று சுற்றுலா பயணி ஒருவருக்கு புகைப்படம் கொடுக்க ஏற்பாடு செய்தமை தொடர்பான காட்சிகள் கேமராவில் பதிவாகியுள்ளது.

காட்டு யானைகள் வாகனங்களை தாக்கும் சம்பவங்களும் கடந்த காலங்களில் பதிவாகியுள்ளன.

இதன்காரணமாக சுற்றுலாப் பயணிகள் மற்றும் பயணிகள் இதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு வனவிலங்கு அதிகாரிகள் கேட்டுக்கொள்கிறார்கள்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

பிரதான பாதை ரயில் சேவையில் பாதிப்பு

களனி மற்றும் புத்தளம் பிரதான பாதையில் ரயில் சேவைகள் இவ்வாறு தடைபட்டுள்ளதாக ரயிவே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. சமிக்ஞை கோளாறு...

சிசு செரிய பஸ் சேவை எண்ணிக்கையை 2000 வரை அதிகரிக்க நடவடிக்கை

அடுத்த வருடம் பாடசாலை மாணவர்களுக்கு மேலும் 500 சிசு செரிய பஸ் சேவைகளை வழங்கி அதன் எண்ணிக்கையை 2000...

வெசாக் அலங்காரங்களுக்கு பிளாஸ்டிக் பயன்படுத்த வேண்டாம்

வெசாக் பண்டிகையின் போது செய்யப்படும் பல்வேறு அலங்காரங்களுக்கு பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக்கை பயன்படுத்த வேண்டாம் என மத்திய சுற்றாடல்...