கோல் பேஸ் போராட்ட நிலம் எந்த முதலீட்டாளருக்கும் வழங்கப்படவில்லை

184

கோல்பேஸ் போராட்ட நிலம் எந்தவொரு முதலீட்டாளருக்கும் வழங்கப்படவில்லை என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரும் ஆளும் கட்சியின் பிரதம கொரடாவுமான பிரசன்ன ரணதுங்க வலியுறுத்துகின்றார்.

கோல்ஃபேஸ் அகல காணியை கசினோ வியாபாரத்திற்கு குத்தகைக்கு வழங்கத் தயார் என தேசிய மக்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் நேற்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்து பொய்யானது, அடிப்படை ஆதாரமற்றது மற்றும் மக்களை தவறாக வழிநடத்துவதாக அவர் வலியுறுத்துகிறார்.

விஜித ஹேரத் அவர்கள் குறிப்பிட்ட கோல்ஃபேஸ் மைதானத்திற்கு அருகில் உள்ள போராட்ட களம் எந்த முதலீட்டாளருக்கும் வழங்கப்படவில்லை.

கொழும்பு 03, பாலதக்ஷ மாவத்தையில் உள்ள 01 ஏக்கர் காணிக்கான அபிவிருத்தித் திட்டத்திற்கான கோரிக்கையை பாலி இன்வெஸ்ட்மென்ட் தனியார் நிறுவனம் சமர்ப்பித்துள்ளது.

இதன்படி, திட்டங்களுக்காக வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நேரடியாக காணி வழங்கும் முறையின் படி அவர்களிடம் தகவல்களைப் பெற்று அதிகார சபை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் 16.02.2024 அன்று கைச்சாத்திட்டது.

சம்பந்தப்பட்ட முதலீட்டாளர் பத்தாயிரம் டொலர்களுக்கு சமமான தொகையை முற்பணமாக நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு வைப்புச் செய்துள்ளார்.

அதன்படி, சம்பந்தப்பட்ட காணிக்கான அரசின் மதிப்பீட்டு அறிக்கையைப் பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நாங்கள் இங்கு எந்த தவறும் செய்யவில்லை என்பதை கௌரவ விஜித ஹேரத் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம். இந்த திட்ட முன்மொழிவு ஒரு கலப்பு முதலீட்டிற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. முன்மொழிவு இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை.

அரசாங்க விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்குப் புறம்பாக வெளிநாட்டு முதலீட்டாளருக்கு எந்தவொரு காணியையும் வழங்கவோ அல்லது அத்தகைய முதலீடுகளை அங்கீகரிக்கவோ மாட்டோம் என்பதை நான் இந்த சபைக்கு மிகவும் பொறுப்புடன் கூற விரும்புகின்றேன்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here