follow the truth

follow the truth

July, 2, 2025
HomeTOP1ஜனாதிபதி - அமெரிக்க பிரதி இராஜாங்க செயலாளர் சந்திப்பு

ஜனாதிபதி – அமெரிக்க பிரதி இராஜாங்க செயலாளர் சந்திப்பு

Published on

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் முகாமைத்துவ மற்றும் வளங்களுக்கான பிரதி இராஜாங்கச் செயலாளர் ரிச்சர்ட் வர்மாவிற்கும் (Richard Verma) ரிச்சர்ட் வர்மாவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (23) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இலங்கை அரசாங்கத்தின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் பிரதி இராஜாங்க செயலாளர் இதனபோது பாராட்டுத் தெரிவித்தார்.

விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டம் உட்பட இலங்கையில் தற்போது மேற்கொள்ளப்படும் முக்கிய பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் கடன் மறுசீரமைப்பு செயல்முறைகளின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அமெரிக்க பிரதி இராஜாங்க செயலாளருக்கு விளக்கமளித்தார்.

ஹூதி கிளர்ச்சியாளர்கள் தொடர்பில் சவூதி அரேபியாவின் ஸ்திரத்தன்மைக்கு ஆதரவு தெரிவித்த ஜனாதிபதி, இந்து சமுத்திரத்தின் சுதந்திரமான கடற்பயணத்திற்கு இலங்கை தொடர்ந்தும் அர்ப்பணிக்கும் எனவும் உறுதியளித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முதலீடுகளில் இடம்பெற்ற ஊழல் தொடர்பான மோசமான அனுபவங்கள் இனி இருக்காது

இலங்கையின் எரிசக்தி, உள்கட்டமைப்பு, டிஜிட்டல் பொருளாதாரம், சுற்றுலா, விவசாயம் மற்றும் தொழில்முனைவோரின் திறன் மேம்பாடு ஆகியவற்றில் புதிய முதலீட்டு...

தலைக் கவசங்களின் தரம் தொடர்பில் புதிய நடவடிக்கை?

இலங்கையில் வீதி விபத்துக்களால் அதிகளவு உயிரிழப்புக்கள் ஏற்படுவது மோட்டார் சைக்கிள் விபத்துக்களாலாகும். ஆகையால் தலைக் கவசங்களின் தரம் தொடர்பில்...

டெங்கு ஒழிப்பு – 153 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட விசேட ஆய்வின் ஒரு பகுதியாக இன்று (01) 22,294 வளாகங்கள்...