follow the truth

follow the truth

May, 20, 2024
HomeTOP2உத்திகவின் வெற்றிடம் யாருக்கு?

உத்திகவின் வெற்றிடம் யாருக்கு?

Published on

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததன் காரணமாக வெற்றிடமான உறுப்பினர் பதவிக்கு கட்சி உறுப்பினர் பட்டியலில் இருந்து முன்னாள் பிரதி அமைச்சர் எஸ்.சீ.முதுகுமாரன தகுதி பெற்றுள்ளார்.

2020ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், அனுராதபுரம் மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஏழு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டதுடன், உத்திக பிரேமரத்ன அந்த மாவட்டத்திலிருந்து மூன்றாவது நபரானார்.

ஒரு இலட்சத்து முப்பத்து மூவாயிரம் வாக்குகளைப் பெற்ற உத்திக பிரேமரத்ன முதலாம் இடத்தை விட 5,000 வாக்குகள் வித்தியாசத்திலும் இரண்டாம் இடத்தை விட நூற்றுக்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்திலும் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தும் இளம் தலைவராக செயற்படுவதற்கு தனக்கு ஒருபோதும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என தனது இராஜினாமா கடிதத்தில் உத்திக பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

டயானா தலைமறைவு – சந்தேக நபராக பெயரிடுமாறு உத்தரவு

கடவுச்சீட்டு விவகாரம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை சந்தேகநபராகக் குறிப்பிட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு...

சஜித் – அநுர விவாதம் ஜூன் 6

பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விவாதத்திற்கு சஜித் பிரேமதாச வழங்கிய திகதிகளில்...

கெஹெலிய உள்ளிட்ட 8 பேருக்கு மீளவும் விளக்கமறியல்

தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசியை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 பேர்...