follow the truth

follow the truth

May, 11, 2025
HomeTOP1பதவி விலகத் தயாராகும் பிரதமர் மஹிந்த?

பதவி விலகத் தயாராகும் பிரதமர் மஹிந்த?

Published on

பிரதமர் மஹிந்த ராஜபக்ச அடுத்த மூன்று மாதங்களுக்குள் பதவி விலகத் தீர்மானித்துள்ளதாக அவருக்கு நெருக்கமான தரப்புத் தகவல்கள் தெரிவிப்பதாக இணையத்தள செய்தி ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது

அந்தச் செய்தியில்,

“அநுராதபுரத்தில் ருவன்வெளிசாயவில் பௌத்த பெருமான விஜயம் செய்த எட்டு தளங்கள் இருக்கின்றன. இதற்கு மேலதிகமாக ஒன்பதாவது தளத்தை (விகாரையை) பிரதமர் மஹிந்த ராஜபக்ச திறந்துவைக்கவுள்ளார்.

இது பௌத்த மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. எனினும், இது பௌத்த பெருமானின் வரலாற்றுச் சிறப்பு மிக்க ருவன்வெளியாவில் சேர்க்கப்படாது என்ற கருத்தும் சிங்கள பௌத்தர்கள் மத்தியில் இருக்கிறது.

இந்த நிலையில், குறித்த விகாரையை திறந்துவைத்த பின்னர் பிரதமர் பதவியில் இருந்து விலகி, அரசியலில் இருந்து ஓய்வு பெற மஹிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரதமரின் உடல் நிலை மோசமாகி வருவதால் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், பிரதமர் பதவிக்கு பசில் ராஜபக்சவை அல்லது நாமல் ராஜபக்சவை நியமிப்பது குறித்தும் ஆராயப்பட்டு வருவதாக பிரதமருக்கு நெருக்கமான தகவல்கள் தெரிவிக்கின்றன”

நன்றி : மலையக குருவி

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தினை வரவேற்கிறேன் – ஜனாதிபதி

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் வரவேற்று இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிக்கையொன்றை...

வெசாக் நிகழ்வை முன்னிட்டு கொழும்பு நகரில் விசேட போக்குவரத்து வேலைத்திட்டம்

2025 வெசாக் நிகழ்வை முன்னிட்டு கொழும்பு நகரில் செயல்படுத்தப்படும் போக்குவரத்து திட்டத்தை பொலிஸார் அறிவித்துள்ளனர். அகில இலங்கை பௌத்த மகா...

கோபா குழுவில் முன்னிலையான ரயில்வே திணைக்களம்

பல வருடங்களாக கணக்காய்வு அறிக்கைகளை முறையாக சமர்ப்பிக்க ரயில்வே திணைக்களம் தவறியுள்ள விடயம் கோபா குழுவின் முன்னிலையில் தெரியவந்தது. இதன்...