டெலிகொம், லங்கா ஹொஸ்பிட்டல் நிறுவனத்தின் பங்குகள் தொடர்பான தடையுத்தரவு

215

ஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனம் மற்றும் லங்கா ஹொஸ்பிட்டல் நிறுவனம் ஆகியவற்றின் பங்குகளை மாற்றும் செயற்பாடு தொடர்பில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதை மார்ச் 12 ஆம் திகதி வரை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

ஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனம் தொடர்பில் Lycamobile SARL நிறுவனம் மற்றும் Pettigo Comércio Internacional நிறுவனம், லங்கா ஹொஸ்பிட்டல் நிறுவனம் தொடர்பில் LYCA LEASING HOLDING நிறுவனம் மற்றும் Haim International ஆகியன தாக்கல் செய்துள்ள 2 ரிட் மனுக்களை ஆராய்ந்த பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

குறித்த மனுக்கள் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி D.N.சமரகோன் முன்னிலையில் இன்று(28) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here