ஏலத்தில் விடப்படவுள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

2321

மார்ச் 05 ஆம் திகதி ஸ்ரீலங்கன் விமான சேவையை கொள்வனவு செய்வதற்கான ஏலம் நடைபெறவுள்ளது.

அன்றைய தினம் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை விலைமனுக்கள் கோரப்படும் என துறைமுக, கடல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் சமர்ப்பிக்கப்பட்ட விலைமனுக்கள் மதிப்பீடு செய்யப்பட்டு அதற்கு ஆதரவளிக்க தொழில்நுட்பக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் விலைமதிப்பீடுகளை மதிப்பீடு செய்து இறுதியாக அமைச்சரவைக்கு அனுப்பி வைப்பார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here