follow the truth

follow the truth

March, 20, 2025
HomeTOP2"அறுவை சிகிச்சை செய்து கொண்ட கேத்தரின் எங்கே?"

“அறுவை சிகிச்சை செய்து கொண்ட கேத்தரின் எங்கே?”

Published on

பிரித்தானிய இளவரசி கேத்தரின் மிடில்டன் (Catherine Middleton).

சுமார் 2 மாதங்களாக, 42-வயதாகும் “கேட்” (Kate) என அழைக்கப்படும் கேத்தரின் மிடில்டன் பொதுவெளியில் காணப்படவில்லை. இது பல்வேறு யூகங்களுக்கும், சந்தேகங்களுக்கும் வழிவகுத்துள்ளது.

கடந்த ஜனவரி 17 அன்று, பிரிட்டிஷ் அரண்மனையின் அதிகாரபூர்வ அலுவலகம், கேத்தரினுக்கு வயிற்று பகுதியில் அறுவை சிகிச்சை நடைபெற்றதாகவும் அவர் ஈஸ்டர் பண்டிகை காலகட்டத்தில் மீண்டும் பொதுவெளிக்கு திரும்புவார் என தெரிவித்தது.

ஆனால், அவர் இதுவரை காணப்படாததால் சமூக வலைதளங்களில் ஏராளமான வதந்திகள் பரவி வருகின்றன. கேத்தரினின் உடல்நலம் குறித்தும் சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், அரண்மனை வட்டாரங்கள் இதுவரை அதிகாரபூர்வமாக ஏதும் தெரிவிக்கவில்லை.

இதற்கு சான்றாக, ஒரு நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ், பாதியிலேயே “சொந்த விஷயமாக” புறப்பட்டு சென்றதை சமூக வலைதளங்களில் பயனர்கள் குறிப்பிட்டு அவரும் தனது மனைவியின் உடல்நலம் குறித்து ஏதும் தெரிவிக்காமல் இருப்பதை பயனர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

கேத்தரினின் தற்போதைய உடல்நிலை குறித்து புகைப்படங்கள் ஏதும் சமூக வலைதளங்களில் வெளியாகாததும் வதந்திகளுக்கு மேலும் வலுவூட்டுகிறது.

கேத்தரினுக்கும், அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளதாகவும், அதனால் கேத்தரின் மன உளைச்சலில் இருப்பதாகவும் அரண்மனைக்கு நெருக்கமானவர்கள் சிலர் வலைதளங்களில் பதிவு செய்தனர்.

உடல்நலம் தேறி வந்த கேத்தரின், திடீரென “கோமா” நிலைக்கு சென்று விட்டதாகவும் சில உறுதிப்படுத்தப்படாத கருத்துகள் இணையத்தில் உலவுகின்றன.

பிரிட்டிஷ் அரண்மனைக்கு விசுவாசமிக்க பெரும்பாலான இங்கிலாந்து பொதுமக்கள் கேத்தரின் விரைவில் உடல்நலம் தேற வேண்டும் என்பதையே விரும்புகின்றனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புலமைப்பரிசில் பரீட்சையின் மீளத் திருத்த பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு

2024ம் ஆண்டு தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் மீளத் திருத்தம் செய்யப்பட்ட பெறுபேறுகள் இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தால்...

யுத்த நிறுத்தத்திற்கு மத்தியில் காஸாவில் தொடரும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பிற்கு சவூதி கண்டனம்

காஸாவில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற யுத்த நிறுத்தத்திற்கு மத்தியில் தொடரும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு சவூதி அரேபியா கண்டனம்...

ரணிலின் குடியுரிமையை இரத்து செய்யுமாறு கோரிக்கை

1988-89 பயங்கரவாத காலத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் குழு ஒன்று, சர்ச்சைக்குரிய படலந்த சம்பவம் குறித்து விசாரிக்க புதிய...