இலங்கையர்களுக்கு ஜப்பானில் தொழில் வாய்ப்பு

649

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் வேண்டுகோளுக்கு இணங்க இலங்கை தொழிலாளர்களுக்கு ஜப்பானின் கட்டிட சுத்திகரிப்பு துறையில் தொழில் வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளது . இதற்கானத் தேர்வு எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ளது .

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் நேற்று(28) ஜப்பான் கட்டிடத் துப்புரவுப் பணியாளர்கள் சங்கத்தினருக்கும் அமைச்சருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு அமைச்சர் தெரிவித்தார்.

ஜப்பானிய மொழி புலமை மட்டம் N4 விண்ணப்பதரிகள் SSW விசா பிரில் விண்ணப்பிக்க முடியும் . இதற்கென தகுதிகான் தேர்வு எழுத்து மற்றும் செயன்முறையில் நடாத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

SWW மட்டம் 27 முகாமைத்துவ பதவிகளுக்கு விண்ணப்பிப்பதுடன் அது நிரந்தர வதிவிடத்திற்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பையும் வழங்கும் என இக்கலந்துரையாடலில் பேசிய ஜப்பானிய பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here