ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் பெருமளவானோர் எதிர்வரும் 10ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்வார்கள் என கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவிக்கிறார்.
சிறிகொத்த கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்படி அடுத்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச போட்டியிடமாட்டார் என அவர் தெரிவித்துள்ளார்.
அண்மைய நாட்களில் சில அரசியல் கட்சித் தலைவர்களும் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதாகத் தெரிவித்த அவர், எண்பதுக்கும் மேற்பட்ட குழுக்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளதாகத் தெரிவித்தார்.