follow the truth

follow the truth

May, 15, 2024
Homeஉலகம்பாராளுமன்றில் மின்வெட்டு - லிப்டில் சிக்கிய உறுப்பினர்கள்

பாராளுமன்றில் மின்வெட்டு – லிப்டில் சிக்கிய உறுப்பினர்கள்

Published on

மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவின் நாடாளுமன்றத்திற்கான மின் விநியோகத்தை அந்நாட்டு மின்சார நிறுவனம் துண்டித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கானா நாடாளுமன்றத்தில் அதிபர் நானா அகுஃபோ–அட்டோ (Nana Akufo-Addo) நாட்டு மக்களுக்கு உரையாற்றிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக மின்சாரம் வழமைக்குத் திரும்பும் என நினைத்து உறுப்பினர்கள் அமர்ந்திருந்த நிலையில், மின்சாரத்தடை நீடித்தது.

சில நிமிடங்கள் கடந்ததும், உறுப்பினர்கள் அமர்ந்திருந்த சபைக்கு மட்டும் ஜெனரேட்டர் உதவியுடன் மின்சாரம் கிடைத்தது.

ஆனால், மின்சார சேவை பாராளுமன்றத்தின் பிற பகுதிகளுக்கு வரவில்லை. இதனால் மின் தூக்கியில் சென்ற பல உறுப்பினர்கள் அதிலேயே சிக்கிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

நாடாளுமன்ற அலுவலகம் செலுத்த வேண்டிய மின் கட்டண மிகுதியை வசூலிக்க பல முறை அறிவித்தல் விடுத்தும் கட்டணத்தை செலுத்தாததால், மின் விநியோகத்தை துண்டித்ததாக அந்நாட்டு மின்சார நிறுவன செய்தித் தொடர்பாளர் வில்லியம் போடெங் தெரிவித்துள்ளார்.

மின் தடை என்பது கட்டணம் செலுத்தாத அனைவருக்கும் தான். கட்டணம் செலுத்தாதவர்கள் யாராக இருந்தாலும் மின்சார விநியோகம் துண்டிக்கப்டும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

கட்டணத்தின் ஒரு பகுதியை செலுத்திய பிறகே நாடாளுமன்றத்திற்கு மின் விநியோகம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

உலகின் மிகப்பெரிய விமான நிலையம்

உலகின் மிகபெரிய விமான நிலையமான துபாயின் அல் மாக்தோம் (Al Maktoum) சர்வதேச விமான நிலையத்தின் கட்டுமானப் பணிகள்...

துபாயில் பறக்கும் டாக்ஸி சேவை

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் பறக்கும் டாக்ஸி சேவையை அடுத்த ஆண்டு முதல் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு...

நேபாள பிரதமர் இராஜினாமா

நேபாள ஜனதா சமாஜ்பதி (ஜே.எஸ்.பி.-என்) தலைவரும் துணை பிரதமருமான உபேந்திர யாதவ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அத்துடன் பிரசந்தா...