மும்முனைப் போராகும் ஜனாதிபதி தேர்தல்

1260

இம்முறை ஜனாதிபதித் தேர்தல் மூன்று பொது வேட்பாளர்களுக்கிடையிலான மும்முனைப் போராக மாறிவருவதாகவும், மூன்று வேட்பாளர்களுக்குச் சொந்தமான முகாம்களை பலப்படுத்தும் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியானது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும், ஐக்கிய மக்கள் சக்தியானது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவையும் தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகள் ஜனாதிபதித் தேர்தலில் கட்சியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவை பொது வேட்பாளராக முன்னிறுத்துவதற்கு ஏற்கனவே தீர்மானித்துள்ளன.

மூன்று பொது வேட்பாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் பல்வேறு அமைப்புகள், குழுக்கள், பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன ஐக்கிய முன்னணி இதுவரை ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளரை முன்வைத்துள்ளதா? இல்லையா? என்பது குறித்து முடிவு செய்யப்படாத போதிலும், கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ நாளை மறுதினம் (05) இலங்கை வந்ததன் பின்னர் இது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என அக்கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் டெய்லி சிலோன் வினவலின் போது தெரிவித்தார். தற்போது அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் ஐக்கிய மக்கள் சக்தியின் பெரும் எண்ணிக்கையான உறுப்பினர்கள் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட தீர்மானித்துள்ளதாகவும் இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாகவும் அறியமுடிகின்றது.

பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா தலைமையிலான புதிய கூட்டணி, ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகி ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதியுடன் இணையவுள்ளதோடு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடர்பான குழுவும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு-கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிடுவதில்லை என்றும் அந்த மாகாண மக்களின் ஆதரவை ரணில் விக்கிரமசிங்க பெறுவார் என்றும் தெரியவந்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், திகாம்பரன், பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் மற்றும் ஐக்கிய மக்கள் முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சிலரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க இணக்கம் தெரிவித்துள்ளனர்.

“பொதுஜன பெரமுனவில் இருந்து ஜனாதிபதித் தேர்தலுக்கு யார் முன்னிறுத்தப்படுவார்கள் என்பதை நான் காலப்போக்கில் உங்களுக்குச் சொல்வோம்” என கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலர் சமீபத்திய ஊடக சந்திப்புகளில் தெரிவித்தனர். தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்க பல அமைப்புக்கள் இணக்கம் தெரிவித்துள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தொடர் மாநாடுகளை நடத்தி ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ளார்.

எனினும், கடந்த ஜனாதிபதி தேர்தலில் கூட அப்போதைய வேட்பாளராக களமிறங்கி இருந்த எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு இப்போது அநுர குமாரவின் கூட்டங்களை போன்றே மக்கள் அலை மோதியதாகவும் ஆனால் இறுதியில் கோட்டாபய ராஜபக்ஷ 6,924,255 வாக்குகளையும் சஜித் பிரேமதாச 5,564,239 வாக்குகளையும் அநுர குமார திசாநாயக்க 418,553 வாக்குகளையும் பெற்றிருந்ததாகவும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் மும்முனை போட்டியாகவுள்ள இந்த வருட ஜனாதிபதி தேர்தலில், இந்நாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் மற்றும் சஜித் பிரேமதாச அல்லது அநுர குமார என்ற ஒழுங்கில் மதிப்பீடுகள் இடம்பெற்று வருகின்றன.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here