பாகிஸ்தான் பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் மீண்டும் தேர்வு

308

பாகிஸ்தானின் பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியின் ஷெபாஸ் ஷெரீப் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானில் கடந்த மாதம் 8-ம் திகதி பல்வேறு சம்பவங்களுக்கு மத்தியில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது.

கூட்டணி ஆட்சி அமைவது உறுதியான நிலையில் 33-வது பிரதமராக பாக்.முஸ்லிம் லீக் – நவாஸ் கட்சியின் தலைவர் ஷெபாஸ் ஷெரீப் இன்று பதவி ஏற்க உள்ளார்.

பிரதமரை தொடர்ந்து நாடாளுமன்ற சபாநாயகர், துணை சபாநாயகர் உள்ளிட்டோரும் தேர்வு செய்யப்பட உள்ளனர். பிரதமர், சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்வை தொடர்ந்து அதிபர் மாளிகையான ஐவான்-இ-சதரில் நடைபெறும் விழாவில் புதிய பிரதமர் பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

 

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here