365 நாட்களும் நாட்டில் விலை அதிகரிப்பு கலாச்சாரமே இருந்து வருகிறது

260

பால் தேனீர், தேனீர், தின்பண்டங்கள், சிற்றூண்டிகள்,சாப்பாடுப் பொதிகள், கொத்து போன்றவற்றின் விலைகள் அதிகரித்துள்ளன. 24 மணி நேரமும் 365 நாட்களும் நாட்டில் விலை அதிகரிப்பு கலாச்சாரமே இருந்து வருகிறது. விலைவாசி உயர்ந்து, மக்களின் வாழ்க்கை சீரழிந்தாலும், அரசிடம் இதற்கான பதில் இல்லை. இவ்வாறான நிலையில் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் பணத்தை பெற்றுக்கொண்டு வெளிநாடு முழுவதும் விஜயங்களை மேற்கொண்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எமது நாட்டால் மின் உற்ப்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியவில்லை. அரசாங்கம் எவ்வளவு தம்பட்டம் அடித்துக் கொண்டாலும், அரசாங்கம் எப்போதும் மக்கள் மீது சுமைகளை ஏற்றி ஆட்சியாளர்கள் மனிதாபிமானமற்ற வாழ்க்கையை முன்னெடுத்து வருகின்றனர்.​​ ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் அதிநவீன மூலோபாய திட்டத்தின் மூலம் டொலர்களை கொண்டு வரும் திட்டத்தை செயல்படுத்தப்படும்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத் திட்டத்தின் 117 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், ஹம்பாந்தோட்டை, திஸ்ஸமஹாராம, ஓயாஹவ, ராவணவெவ கனிஷ்ட கல்லூரிக்கு வழங்கி வைக்கும் நிகழ்வில் இன்றைய (03) தினம் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

நடன மற்றும் அரங்கேற்றங்கள் குழுவுக்குத் தேவையான அணிகலன்களைப் பெற்றுக் கொள்ள ஒரு இலட்சம் ரூபா நன்கொடையும் இன்று வழங்கி வைக்கப்பட்டது.

வங்குரோத்து என்ற இந்த மரண வலையில் இருந்து வெளியேற பொருளாதார அபிவிருத்தி ஏற்பட வேண்டும். அதற்காக உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய நேரத்தில் அரசாங்கம் பொருளாதாரத்தை சுருக்கி வருகிறது. மின்கட்டண அதிகரிப்பால் புதிய முதலீட்டாளர்கள் நாட்டிற்கு வரமாட்டார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here