இல்லத்தரசிகளை குறைவாக மதிப்பிட வேண்டாம்

202

ஒவ்வொரு சேவையை போன்று தமது வீட்டில் சகல வேலைகளையும் முன்னெடுக்கும் இல்லத்தரசிகளை எந்த காரணத்திற்காகவும் குறைவாக மதிப்பிட வேண்டாம் என பெண்கள் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார்.

எதிர்வரும் எட்டாம் திகதி கொண்டாடப்படவுள்ள சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அது தொடர்பாகத் தெளிவு படுத்துவதற்காக அரசாங்க தகவல் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது இராஜாங்க அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மார்ச் மாதம் 6 மற்றும் ஏழு ஆகிய இரு தினங்களிலும் பத்தரமுள்ள வாட்டர் ஏஜ் வளாகத்தில் காலை 8 மணிக்கு இடம் பெறவுள்ள நீயே சக்தி 2024 உற்பத்தி சந்தைக்கு இராஜாங்க அமைச்சர் சகலருக்கும் அழைப்பு விடுத்தார்

இச்சந்தைக்காக இலங்கை முழுவதும் உள்ள பெருந்தொகையானவர்கள் வருகை தந்து தமது கையால் மேற்கொண்டு உற்பத்திகள் உட்பட பல்வேறு உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதற்காக எடுத்து வர உள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here