ஏனைய அரச ஊழியர்களின் சம்பளம் எப்போது அதிகரிக்கப்படும்?

332

மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் சமூகத்தில் சர்ச்சை நிலவி வரும் நிலையில், இது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து அறிய விரும்புகின்றோம். இவ்வாறான தன்னிச்சையான முடிவுகளை எடுக்க முடியாத வகையில் மத்திய வங்கி சட்டத்தில் திருத்தங்களை கொண்டுவர அரசாங்கம் செயற்படுகிறதா என்பதை அறிய விரும்புவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நிலையியற் கட்டளை 27(2)ன் கீழ் மத்திய வங்கியின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (06) பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த காலங்களில் அரச சேவையில் உள்ள தொழில் வல்லுநர்கள் தமது சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இன்று வைத்தியர்கள் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு மட்டுமே அந்த நிவாரணம் கிடைத்துள்ளது. அரச சேவையில் தொழில்சார் பொறுப்புகளை வகிக்கும் தொழில்சார் வல்லுநர்கள் மற்றும் ஏனைய அரச ஊழியர்களின் சம்பளம் எப்போது அதிகரிக்கப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார்.

20,000 அரச ஊழியர்களும் சம்பள அதிகரிப்பு கோரிய போதும் மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள கொடுப்பனவை இவ்வாறு அதிகரிக்க அனுமதித்துள்ள முன்னுதாரணத்தில் முழு அரச ஊழியர்களுக்கும் இவ்வாறே தீர்வு வழங்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here