தமிழ், முஸ்லிம் மக்கள் சேர்ந்தே என்னை விரட்டியடித்தனர்

4847

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தான் விரட்டியடிக்கப்பட்டது குறித்த ஒரு புத்தகத்தை அண்மையில் வெளியிட்டிருந்தார். இந்த புத்தகத்தில் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை அவர் முன்வைத்து வருகின்றார்.

குறிப்பாக தமிழ் முஸ்லிம் மக்களுக்கு தன்னுடன் இருந்த முரண்பாடு மற்றும் இதர காரணங்களுக்காக அந்த இரண்டு சமூகமும் ஒன்றாக இணைந்து “அரகலய” போராட்டத்தில் தன்னை எதிர்த்ததாக தெரவித்துள்ளார்.

குறிப்பாக கொழும்பு மற்றும் அதனை சுற்றி நடந்த போராட்டங்களில் இந்த விடயம் வெளிப்படையாக தெரிந்ததாகவும் தான் ஆட்சியில் நீடித்தால் சிறுபான்மை மக்களை விட இந்த நாட்டு சிங்கள பௌத்தர்கள் வலுப்பெற்றுவிடுவார்கள் என்ற அச்சத்தினால் தமிழ், முஸ்லிம்கள் இதனை செய்திருக்கலாம் என்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here