கெஹலியவிற்கு எதிரான வழக்கு மார்ச் 26

194

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல வெகுசன ஊடக அமைச்சராக செயற்பட்ட காலப்பகுதியில், அவரது தனிப்பட்ட தொலைபேசி கட்டணப் பட்டியல் செலுத்தப்பட்டமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் அடிப்படை ஆட்சேபனைகள் தொடர்பான உத்தரவு மார்ச் 26 ஆம் திகதி வழங்கப்படுமென கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தின் சுற்றுநிரூபத்திற்கு முரணாக, அரச அச்சகக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 2,30,984 ரூபா 45 சதம் நிதி, தொலைபேசி கட்டணமாக செலுத்தப்பட்டமை தொடர்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here