இந்த ஆண்டு உலக அழகி பட்டத்தை செக் குடியரசை சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா வென்றுள்ளார்.
71வது உலக அழகி மகுடம் இந்தியாவின் மும்பையில் நேற்று (09) இரவு பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.
115 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்தப் போட்டியில் செக் குடியரசைச் சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா உலக அழகி பட்டத்தை வென்றார்.
லெபனானை சேர்ந்த யாஷ்மினா ஜைடவுன் இரண்டாம் இடம் பிடித்தார்.
28 வருடங்களின் பின்னர் போட்டியை நடத்திய இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய 22 வயதான சினி ஷெட்டி போட்டியின் முதல் 08 பேரில் தெரிவாகியமை விசேட அம்சமாகும்.