அதிக வெப்பநிலை காரணமாக மாணவர்களின் பாதுகாப்பிற்கு தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு கல்வி அமைச்சு இரண்டாவது முறையாகவும் அறிவிப்பை வெளியிட்டு இன்று (12) மீண்டும் பாடசாலை அதிகாரிகளுக்கு நினைவூட்டியுள்ளது.
வெளிப்புற நடவடிக்கைகளை எவ்வாறு திட்டமிடுவது என்பது குறித்த அறிவுறுத்தல்களை சில பாடசாலைகள் புறக்கணிப்பதாகவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
அதிக வெப்பநிலை காரணமாக சிறுவர்களின் பாதுகாப்பிற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சு முதற்கட்ட அறிவிப்பை கடந்த 26 ஆம் திகதி வெளியிட்டது.