follow the truth

follow the truth

July, 6, 2025
Homeஉள்நாடுIT பொறியாளர்களின் சொர்க்கபுரியாக நாட்டை மாற்றுவோம்.

IT பொறியாளர்களின் சொர்க்கபுரியாக நாட்டை மாற்றுவோம்.

Published on

நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாண்மையாளர்கள் உள்நாட்டு உற்பத்தியில் 50% மற்றும் வேலைவாய்ப்பிற்கு 52% பங்களிப்பை வழங்குகின்றனர். நடுத்தர தொழில் முயற்சிகளும் நடுத்தர தொழில் முனைவோருமே தற்போதைய பொருளாதாரத்தின் இயங்கியாகும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல், கொரோனா மற்றும் வங்குரோத்து நிலை ஆகிய மூன்று நெருக்கடிகளால் இத்தொழிற்துறை முடங்கியது. நாடு இறுதியில் வங்குரோத்து நிலைக்கு செல்ல நேரிட்டது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பராட்டே சட்டம் மூலம் இவர்களது சொத்துக்கள் ஏலம் விடப்படும் சூழ்நிலையில், இது தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தி கடந்த ஓராண்டுக்கும் மேலாக பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் குரல் எழுப்பியதன் விளைவாக, நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறையினரின் சொத்துக்களை ஏலம் விடுவதை தற்காலிகமாக நிறுத்த சில வாரங்களுக்கு முன்பு முடிவெடுத்திருந்த போதிலும், நாட்டில் அரசாங்கமொன்று இல்லை என்ற போக்கில், வங்கிகளும் நிதி நிறுவனங்களும் இந்த ஏல நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஆனால், மீண்டும் ஒரு சுற்றறிக்கை மற்றும் வர்த்தமானி மூலம் அரசாங்கம் இந்த முடிவை சட்டமாக மாற்றத் தயாராகி வருகிறது. இது நுண்,சிறிய மற்றும் நடுத்தர தொழில்களுக்கு கிடைத்த நிவாரணமாகும். மக்களின் பொருளாதார செயல்முறைக்கு மீண்டும் உயிர் கொடுக்க அரசாங்கம் மூலதனத்தை வழங்க வேண்டும். இதன் மூலம் அழிவின் விளிம்பில் இருக்கும் தொழில் முயற்சியாளர்கள் மீண்டும் தொழில்களில் ஈடுபடுவர். இதன் ஊடாக வருமானம் ஈட்டி, வட்டி மற்றும் கடனை செலுத்த முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நமது நாட்டில் ஐடி திறன் கொண்ட பணியாளர்களை உருவாக்கி, ஐடி பொறியாளர்களின் சொர்க்க தேசமாக இலங்கையை மாற்றுவோம். ஐடி பணியாளர்களை ஏற்றுமதி செய்யும் இயலுமையை உருவாக்க வேண்டும். உள்நாட்டு சேவைத் தொழிலின் ஊடாக மட்டுமே பணம் ஈட்டும் பிற்போக்குத்தனமான பலவீனமான கொள்கையைக் கொண்ட நாடாக எம்மால் தொடர்ந்தும் பயணிக்க முடியாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹரக் கட்டா மருத்துவமனையில் அனுமதி

'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக உறுப்பினரான நதுன் சிந்தக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

கட்டுநாயக்க விமான நிலையத்தில் VAT Refund முன்னரங்கம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்குள் பொருட்களை கொள்வனவு...

வத்தளை, ராகம, ஜா-எல பகுதிகளில் சோதனை – 300க்கும் மேற்பட்டோர் கைது

கந்தானை, ஜா-எல, வத்தளை மற்றும் ராகம பகுதிகளில் நேற்று (04) மேற்கொள்ளப்பட்ட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோத போதைப்பொருள்...