மிரிஹானையில் கோட்டாவை கொல்ல முஸ்லிம்களே வந்தனர். சிங்களவர்கள் வரவில்லை

904

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிரத்தியேக தனிப்பட்ட செயலாளர் சுகேஸ்வர பண்டார தனியார் யூடியூப் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் வைத்தே இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

இந்த சூழ்ச்சி யாருடையது என்று எனக்கு விறல் நீட்டி சொல்ல முடியாது. அன்று மிரிஹானையில் ஒரு மணித்தியாலம் பிந்தியிருந்தால் எங்களுக்கு 7 ஆவது நிறைவேற்று ஜனாதிபதியை பற்றி பேச முடியாது. உண்மையில் கொன்றிருப்பார்கள். யார் கொலை செய்ய வந்தார்கள்? தெளிவாக கொலை செய்ய வந்தவர்கள் சிங்களவர்கள் அல்ல. முஸ்லிம்கள்.

கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான இல்லத்துக்கு அருகில் 100 – 150 பேர் அமைதியான போராட்டம் ஒன்றுக்கே ஒன்று கூடியிருந்தனர். ஏனையவர்கள் ஒவ்வொரு இடங்களிலும் திட்டமிட்டு வந்துள்ளனர்.

நான் அந்த இடத்தில் இருந்தேன். நான் அவர்களை போராட்டக்காரர்கள் என்று சொல்ல மாட்டேன். அவர்கள் தீவிரவாதிகள். நான் இடத்திற்கு சென்ற பொழுது என்னை “புள் பேஸ்” ஹெல்மட் அணிந்த ஒருவர் என்னை அவர் பக்கம் இழுத்தெடுத்தார். அந்த இடத்தில் அதிகமானவர்கள் முஸ்லிம்கள்தான் இருந்தார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here