துமிந்த திசாநாயக்கவும் இராஜினாமா

481

பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்கவும் பொது வர்த்தக குழு அல்லது கோப் குழுவின் அங்கத்துவத்தில் இருந்தும் இராஜினாமா செய்துள்ளார்.

Update
March 19, 2024 05:48PM

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கீழ் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட காமினி வலேபொடவும் கோப் குழுவின் அங்கத்துவத்தில் இருந்து விலகியுள்ளார்.

Update
March 19, 2024 04:53PM

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் பொது வர்த்தக குழு அல்லது கோப் குழுவின் அங்கத்துவத்தில் இருந்தும் இராஜினாமா செய்துள்ளார்.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகேவும் கோப் குழுவின் உறுப்புரிமையிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.

Update
March 19, 2024 03:54PM

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். மரிக்கார் பொது விவகாரங்களுக்கான குழு அல்லது கோப் குழுவில் இருந்தும் இராஜினாமா செய்துள்ளார்.

————————-

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஊடாக பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் கோப் குழுவில் இருந்தும் இராஜினாமா செய்துள்ளார்.

அத்துடன், குறித்த தீர்மானத்தை உத்தியோகபூர்வமாக சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஆகியோர் பொது விவகாரங்களுக்கான குழு அல்லது கோப் குழுவின் உறுப்புரிமையிலிருந்து இராஜினாமா செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here