முஸ்லிம் காங்கிரஸோடு இணைகிறாரா அமான் அஷ்ரப்?

521

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரபின் புதல்வர் அமான் அஷ்ரபை முஸ்லிம் காங்கிரசில் இணைத்துத்துக் கொள்ள கட்சியின் மூலம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அண்மையில் கொழும்பு ஷெரட்டன் ஹோட்டலில் நடந்த முஸ்லிம் காங்கிரசின் இஃப்தார் நிகழ்வில் அமான் அஷ்ரப் மற்றும் அவரது மனைவியும் கலந்து கொண்டிருந்தனர்.

பொதுவாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் நிகழ்வுகளில் கலந்து கொள்வதை அண்மைக் காலமாக தவிர்த்து வந்த அமான் அஷ்ரப் தற்பொழுது கட்சியின் அழைப்பின் பெயரில் இந்த இஃப்தார் நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார்.

அமான் அஷ்ரப் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் இஃப்தார் அழைப்பை ஏற்றுக்கொண்டமை ஒரு தூர நோக்கு சிந்தனையுடன் எனவும் எதிர்காலத்தில் அவரை முஸ்லிம் காங்கிரஸ் செயற்பாட்டு அரசியலில் இணைத்துக் கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதகாகவும் அறிய முடிகின்றனது.

மாமனிதர் அஷ்ரபின் மரணத்துக்குப் பின்னர் அவருடைய மனைவி மற்றும் மகன் அரசியலில் இருந்து சற்று ஒதுங்கியிருந்த நிலையில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

எவ்வாறாயினும் அமான் அஷ்ரப் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் இணைந்து கொண்டால், நிச்சயம் அந்த கட்சிக்கு பெரும் வலுவாக அது அமையும் எனவும் அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

அத்தோடு யதார்த்த நீதியில் அமான் அஷ்ரப் கட்சியோடு இணைந்தால் எதிர்வரும் பொதுத்தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் போட்டியிடவும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here