“மைத்திரியின் சூழ்ச்சிகள் இங்கு எடுபடாது”

589

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்த அன்று, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிங்கப்பூரில் காதல் மோகத்தில் இருந்தார் என்றும், இதனை நான் அன்றிலிருந்து கூறி வருவதாகவும் எந்த ஊடகமும் கண்டுகொள்ளவில்லை என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா தெரிவித்திருந்தார்.

மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யாரென தனக்குத் தெரியும் என அண்மையில் கண்டியில் நடந்த ஊடக சந்திப்பின் போது தெரிவித்த கருத்தானது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.

இதுகுறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்த மேர்வின் சில்வா;

“… மைத்திரிபால சிறிசேன இன்று நேற்று அல்ல, அன்று ஜனாதிபதியாக்கிய ரணில் விக்கிரமசிங்கவையே யாருக்கும் தெரியாமல் பதவியில் இருந்து நீக்கி மஹிந்த ராஜபக்ஷவை பதவியில் அமர்த்தியவர். ஈஸ்டர் தாக்குதல் நடந்த அன்று மைத்திரிபால சிறிசேன சிங்கப்பூரில் காதல் மோகத்தில் உல்லாசமாக இருந்தார். இதனை நான் கூற பயப்ப மாட்டேன். அன்றும் இதையே நான் கூறினேன். பாவத்திற்கு ஜனாதிபதியான இவர் யாராவது சிக்குவார்களா எனப் பார்க்க இப்போது ஒரு சூழ்ச்சியை மேற்கொள்கிறார்.

டிரான் அலசிடம் நான் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் மீதும், யுக்திய நடவடிக்கை மீதும் எனக்கு அதீத மரியாதையும் நம்பிக்கையும் உண்டு. டிரான் அலஸ் அமைச்சரே, எனது வாய்க்கு ஹேன்ட் ப்ரேக் இல்லை. யாரென்று பார்க்க மாட்டேன். நீங்கள் கண்ணியமான குடும்பத்தில் இருந்து வந்தவர். ஆதலால் நான் எதுவும் கூற விரும்பவில்லை. மைத்திரி மீது விசாரணை நடத்த முன்னர் அவர் சிறைபிடிக்கப்பட வேண்டும். அன்று கெஹெலியவை சிறைபிடித்தது போன்று, மைத்திரியும் சிறைக்காவலில் இருக்க வேண்டும்.

இந்த ஈஸ்டர் தாக்குதலினால் கிறிஸ்தவ மக்கள் இந்த உலகினை விட்டும் பிரிந்தனர். காயம் அடைந்தனர். இதன் முதலாவது சந்தேகநபர் மைத்திரிபால சிறிசேன. டிரான் அலஸ் அமைச்சரே மைத்திரி கைது செய்யப்படாவிடின் அடுத்த குரல் பதிவில் எனது டார்கட் நீங்களாகத்தான் இருக்கும்..

இரண்டு வாரங்களுக்கு முன்னர் தான் தனக்கு தெரியும் என்பதெல்லாம் அப்பட்டமான பொய், அவரது சட்டத்தரணி அப்படிக் கூறுமாறு கூறியிருக்கிறார். அப்படி என்றால் அன்றே கூறியிருக்க வேண்டும். இல்லையா, அங்கொடை மன நல வைத்தியசாலைக்கு கூட்டிச் செல்ல வேண்டும். இல்லையென்றால், அரேபியா போன்று மைத்திரியை சுற்றி அனைவரும் இருக்க அவரை கல்லால் அடிக்க வேண்டும். அவ்வளவுதான்..”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here