குறைக்கப்பட்ட பால்மா விலை போதுமானதல்ல

255

நேற்று குறைக்கப்பட்ட பால்மாவின் விலை போதுமானது இல்லை என நுகர்வோர் குற்றம் சாட்டுகின்றனர்.

இறக்குமதி செய்யப்படும் 1 கிலோ பால் மா பொதி ஒன்றின் விலை 150 ரூபாவினால், 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலையை 60 ரூபாவால் குறைக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், பால்மாவின் விலை குறைக்கப்பட்டுள்ளமையை அடுத்து பால் தேநீரின் விலையை 80 ரூபாய் வரை குறைக்குமாறு தேசிய பாவனையாளர் முன்னணியினர் உணவக உரிமையாளர்களிடம் கோரியுள்ளனர்.

இதற்கமைய பால் தேநீரின் விலையை 10 ரூபாவினால் குறைக்க அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here