ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஜனாதிபதியாக பதவியேற்க இன்னும் ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்பதே நாட்டின் பொது மக்களின் கருத்தாக உள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
வீழ்ச்சியடைந்த நாட்டைக் கட்டியெழுப்பிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீது மக்கள் மிகுந்த மரியாதை வைத்திருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் எவரும் இல்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.