சகல மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்கப்படும் – எதிர்க்கட்சித் தலைவர்

116

ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் காலத்தில் பாடசாலை மாணவர்களை பலப்படுத்துவதற்காக சீருடை மற்றும் மதிய உணவு வழங்கப்பட்ட போதிலும் தற்போது ஆரம்ப பிரிவு பாடசாலை மாணவர்களுக்கு மட்டும் மதிய உணவு வழங்க அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது. இது வெட்கக்கேடான கொள்கை.

ஒரே பாடசாலையில் பயிலும் மாணவர்களை பிரித்து வகைப்படுத்தக் கூடாது. ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் அவ்வாறான வகைப்படுத்தலை மேற்கொள்ளாமல் சகல மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்கப்படும் என் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் ஹம்பந்தோட்டை, தங்கல்ல கொடவாய மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வில், ​​கல்லூரியின் நடனம் மற்றும் அரங்கேற்றங்கள் குழுவினருக்குத் தேவையான ஆடைகளை பெறுவதற்குத் தேவையான ஒரு இலட்சம் ரூபா நிதியையும் நன்கொடையாக வழங்கி வைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here