அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம்

469

அமெரிக்காவில் கப்பல் மோதி பாலம் உடைந்து விபத்துக்குள்ளான நிலையில், அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது.

அமெரிக்காவில் மேரிலண்ட் மாநிலத்தின் பால்டிமோர் நகரிலுள்ள பிரான்சிஸ் ஸ்கொட் கீ பிரிட்ஜ் எனும் பாலமொன்றின் மீது பாரிய கப்பல் மோதியதால், அப்பாலம் ஆற்றில் இடிந்து வீழ்ந்துள்ளது.

66 மீற்றர் நீளமான பாலத்தின் மீது இன்று அதிகாலை 1.35 மணியளவில் பாரிய சரக்குக் கப்பலொன்று மோதி பாலம் இடிந்ததால் பல வாகனங்களும் ஆற்றில் வீழ்ந்துள்ளன.

பிரான்சிஸ் ஸ்காட் பாலம் உடைந்த நிலையில், ஆற்றில் விழுந்தவர்களை மீட்பதற்காகவும், இந்த விபத்து குறித்து விசாரிப்பதற்காகவும் உடனடியாக அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here