இலங்கைக்கு சீனா தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்கும்

154

இலங்கையின் கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளுக்கு சீனா தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்குவதுடன் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் உதவும் என சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

பெய்ஜிங்கில் பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் சீன ஜனாதிபதி சீ ஜிங்பிங்கிற்கும் இடையில் இடம்பெற்ற இருதரப்பு கலந்துரையாடலின் போதே சீன ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சீனாவின் எக்ஸிம் வங்கி மற்றும் சீன அபிவிருத்தி வங்கியுடன் இணைந்து இலங்கைக்கு சீனா தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் என சீன ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

சீனாவுக்கான உத்தியோகபூர்வ அரசமுறை விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் தினேஷ் குணவர்தன, சீன மக்கள் குடியரசின் அரசுத்தலைவர் சீ சின்பிங் மற்றும் சீன பிரதமர் லீ கியாங் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதேவேளை, இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகளுக்கு சீனா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என்றும் இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு உதவும் என்றும் சீன பிரதமர் லீ கியாங் பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here