சிறுநீரக சத்திரசிகிச்சையின் பின்னர் சிறுவன் உயிரிழப்பு – மேலதிக விசாரணை CIDயிடம்

257

கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிறுநீரக சத்திரசிகிச்சையின் பின்னர் மூன்று வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த பெரேரா உத்தரவிட்டுள்ளார்.

பொரளை பொலிஸார் நேற்று முன்வைத்த கோரிக்கையை பரிசீலித்ததன் பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுவனின் சத்திரசிகிச்சையை மேற்கொண்டதாக கூறப்படும் விசேட வைத்தியர் நவீன் விஜேகோன் தற்போது அவுஸ்திரேலியாவில் இருப்பதாகவும் அவரது இருப்பிடம் மற்றும் மின்னஞ்சல் முகவரி என்பன சம்பந்தப்பட்ட துறைகளால் பொலிஸாருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் வைத்தியசாலையின் சிறுநீரகப் பிரிவுக்கு பொறுப்பான விசேட வைத்தியர் உட்பட பல வைத்தியர்கள் நீதிமன்றில் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

வெளிநாட்டில் உள்ள இரண்டு வைத்தியர்களையும் இலங்கைக்கு வரவழைத்து சாட்சியங்களைப் பெற்றுக்கொள்ளுமாறும், மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறும் பொரளை பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here