follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉள்நாடு32% இலாபமீட்டி புதிய சாதனை படைத்த லொத்தர் சபை

32% இலாபமீட்டி புதிய சாதனை படைத்த லொத்தர் சபை

Published on

அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும்.

இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபாய் 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாயினை வழங்கியுள்ளது.

சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளதாக அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல குறிப்பிட்டுள்ளார்.

நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதற்கான விசேட வழிகாட்டல்களை வழங்கியுள்ளதாகவும் தலைவர் தெரிவித்தார்.

இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார்.

அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார்.

LATEST NEWS

MORE ARTICLES

விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைக்கும் நடவடிக்கையுடன், விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட...

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் என்பதை ஏற்கனவே அறிந்தேன் – ஜனாதிபதி

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது என்பதை ஏற்கனவே அறிந்திருந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவிடம்...

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...