“கட்சியில் மீண்டும் இணைந்து கொள்ளுங்கள்”

842

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புதிய தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, கட்சியில் இருந்து விலகிய அனைவரையும் மீண்டும் இணைந்து கலந்துரையாடி இடதுசாரி அரசியலை வலுப்படுத்துமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று ஹம்பாந்தோட்டை நகரில் ‘போராட்டத்தை ஆரம்பிப்போம்’ என்ற தொனிப்பொருளில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கட்சியின் சிரேஷ்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் கருத்து தெரிவித்த நாமல் ராஜபக்ஷ; “.. சிலருக்கு மனக்கசப்பு, வெறுப்பு உணர்வுகள் இருக்கும். அவற்றை மறந்துவிடுவோம். புதிய பயணம் மேற்கொள்வோம். இன்று பாராளுமன்றத்தில் நாம் பெற்ற அறுபத்தொன்பது இலட்சம் வாக்குகளுக்கு பலர் உரிமை கோருகின்றனர்..” எனத் தெரிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here