கச்சத்தீவு விவகாரம் – காங்கிரஸ் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு

330

கச்சத்தீவை காங்கிரஸ் கட்சி எப்படி தாரை வார்த்து கொடுத்தது என்பது பற்றிய புதிய உண்மைகள் வெளிப்பட்டு உள்ளன என இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கச்சத்தீவை விட்டுக் கொடுத்து, தமிழக மீனவர்கள் வாழ்வாதாரத்தைப் பாதிப்புக்குள்ளாக்கிவிட்டு, ஐம்பது ஆண்டுகள் மெளனமாக இருந்து கொண்டு, தேர்தல் நேரத்தில் மட்டும் கச்சத்தீவு குறித்துப் பேசும் மு.க.ஸ்டாலின் சுயபரிசோதனை செய்ய வேண்டிய நேரம் இது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.

மேலும், கச்சத்தீவு குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆர்டிஐ மூலம் பெற்ற தகவலை குறிப்பிட்டு பிரமதர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

கச்சத்தீவை காங்கிரஸ் எப்படி தாரைவார்த்தது என்ற உண்மை தற்போது வெளிவந்துள்ளது. காங்கிரஸை நாம் ஒரு போதும் நம்ப முடியாது என்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் நலன்களை பலவீனப்படுத்த காங்கிரஸ் கட்சி 75 ஆண்டுகளாக உழைத்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here