முதல் இன்னிங்ஸில் இலங்கை வலுவான நிலையில்

46

சுற்றுலா இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் தற்சமயம் இடம்பெற்று வருகிறது.

Chattogramயில் இடம்பெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி அந்த அணி தமது முதலாவது இன்னிங்ஸில் சற்றுமுன்னர் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 531 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் Kusal Mendis 93 ஓட்டங்க​ளையும் Dimuth Karunaratne 86 ஓட்டங்களையும், அணியின் தலைவர் Dhananjaya de Silva 70 ஓட்டங்களையும் பெற்றனர்.

அதேநேரம் Kamindu Mendis ஆட்டமிழக்காமல் 92 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

பந்து வீச்சில் பங்களாதேஷ் அணி சார்பில் Shakib Al Hasan 03 விக்கெட்டுக்களையும், Hasan Mahmud 02 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் Kusal Mendis 93 ஓட்டங்க​ளையும் Dimuth Karunaratne 86 ஓட்டங்களையும், அணியின் தலைவர் Dhananjaya de Silva 70 ஓட்டங்களையும் பெற்றனர்.

அதேநேரம் Kamindu Mendis ஆட்டமிழக்காமல் 92 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here