1500 ரூபாவை கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் ரயில் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நபரொருவர் கடந்த 28ஆம் திகதி, செல்லுபடியாகும் பயணச்சீட்டு இல்லாமல் கொம்பனித்தெரு ரயில் நிலையத்துக்கு பிரவேசித்தாக தெரிவித்து அவரது தேசிய அடையாள அட்டையை ரயில் திணைக்களத்தின் அதிகாரி பெற்றுக்கொண்டார்.
தேசிய அடையாள அட்டையை திருப்பித்தர வேண்டுமாயின் 3000 ரூபாவை கையூட்டலாக வழங்க வேண்டுமென அவர் கோரிய நிலையில், குறித்த சந்தேகநபர் அந்த தொகையை 1500 ரூபாவாக குறைத்து அதனை பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.