பொஹட்டுவையில் ஒழுக்கத்தை சொல்லிக்கொடுக்க ஷாருக்

630

மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவி சாமரி பெரேராவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஒழுக்காற்று சபையின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதியின் சட்டத்தரணிகளான ரஸீக் ஷாருக் மற்றும் டபிள்யூ. தயாரத்னவும் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

சட்டத்தரணிகளான அதுல டி சில்வா, மஞ்சுள வெல்லாலகே, சரத் அத்துகோரள மற்றும் துஷாரி சூரியாராச்சி ஆகியோர் ஒழுக்காற்று சபையின் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here