follow the truth

follow the truth

February, 18, 2025
HomeTOP2ரணிலுக்கு எதிர்ப்பு.. ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகும் நாமல்

ரணிலுக்கு எதிர்ப்பு.. ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகும் நாமல்

Published on

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவு வழங்குவதற்கு கட்சியின் இளைஞர் முன்னணி உள்ளிட்ட இளைஞர் அமைப்புக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க முன்வைக்கப்பட்டால் அவருக்கு ஆதரவளிப்பதில் இருந்து இளைஞர் அமைப்புகளின் தலைவர்கள் விலகுவார்கள் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்துவதற்கு அந்த அமைப்புகள் விருப்பம் தெரிவித்துள்ளன.

ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுமாறு கட்சியின் இளைஞர் அமைப்புகளின் கோரிக்கைகள் நாமல் ராஜபக்ஷவிடம் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராகுமாறு நாமல் ராஜபக்ஷவிடம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் முதற்கட்டமாக தேசிய அமைப்பாளர் பதவியை நாமல் ராஜபக்ஷவிடம் வழங்க பசில் ராஜபக்ஷ ஏற்பாடு செய்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“ஒரே பட்ஜெட்டில் எல்லாவற்றையும் செய்து முடிக்க முடியாது”

அத்தியாவசியப் பொருட்களுக்கு வரிச் சலுகைகளை வழங்குவது தனது அரசாங்கத்தின் கொள்கையாக இருந்தாலும், இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை...

“குரங்கு கதை இப்போது முடிந்து விட்டது.. அதனை மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்த வேண்டாம்”

கடந்த பெப்ரவரி 09 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் தடைக்கான காரணத்தை இலங்கை மின்சார சபை...

இலங்கை வருகிறார் மாலைத்தீவு வெளியுறவு அமைச்சர்

மாலைத்தீவுகளின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா கலீல் பெப்ரவரி 18 முதல் 21 வரையில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். இவ்விஜயத்தின்...