“ரணில் ‘யானை’ சின்னத்தில் போட்டியிட்டால் உதவ மாட்டேன்”

504

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிட்டால் அவருக்கு உதவுவதைத் தவிர்ப்பதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி, ஜனாதிபதித் தேர்தலில் யானைச் சின்னமோ, பொஹொட்டுவ சின்னமோ அல்ல, அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பொதுச் சின்னத்தில் தேசிய வேட்பாளராக போட்டியிட வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.

கம்பஹா மாவட்ட முன்னாள் உள்ளுராட்சி தலைவர்களுடன் உடுகம்பலை அரசியல் காரியாலயத்தில் இன்று (2) இடம்பெற்ற கலந்துரையாடலில், எதிரணியினர் என்ன சொன்னாலும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையும் எண்ணம் தமக்கு இல்லை என அமைச்சர் தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஜனாதிபதியாக வர வேண்டுமானால் அதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவு தேவை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நாமல் ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்துவது தொடர்பில் கட்சியில் கலந்துரையாடல் இல்லை எனவும், அவரை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்தால் அவருக்கு உதவாமல் அரசியலில் இருந்து மௌனிக்கப்படுவதாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். நாமல் ஜனாதிபதி ஆவதற்கு இன்னும் காலம் உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here