சஜித்துடன் விவாதிக்க அநுர தயார்

362

நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் சஜித் பிரேமதாசவுடன் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க விவாதம் நடத்தத் தயார் என தேசிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்திருந்தார்.

நாட்டின் பொருளாதாரம் தொடர்பான விவாதத்திற்கு வருமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பல உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த சுனில் ஹந்துன்நெத்தி, அந்த அழைப்பை தாம் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

விவாதம் மிகவும் பயனுள்ளதாக அமையுமாயின், ஊடகங்களில் வாசிப்பதற்குப் பதிலாக எழுத்துமூலம் அழைப்பிதழ் வழங்குமாறு கோருவதாக சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியை விவாதத்திற்கு அழைக்கும் ஹர்ஷ, எரான், கபீர் போன்றவர்கள் இருப்பதால், அநுர, சஜித் ஆகிய இரு கட்சிகளின் தலைவர்களை நேரடியாக விவாதிப்பது மிகவும் முக்கியமானது எனவும் சுனில் ஹந்துன்நெத்தி குறிப்பிட்டுள்ளார்.

சஜித் பிரேமதாசவுக்கு விவாதத்திற்கு வரமுடியவில்லை என்றால் எழுத்து மூலம் தெரிவிக்குமாறு சுனில் ஹந்துன்நெத்தி கூறியதுடன், விவாதத்தை எப்படி நடத்துவது என்பதை அதன்பின்னர் ஆலோசிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here