நாளை முதல் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்

99

பண்டிகையை முன்னிட்டு தமது சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் நன்மை கருதி நாளை(05) முதல் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய, 200 இற்கும் அதிகமான விசேட பஸ்கள் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்னஹங்ச தெரிவித்தார்.

இதேவேளை, எதிர்வரும் 10ஆம் திகதி முதல் தினமும் 12 விசேட ரயில்களை சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 15 ஆம் திகதி வரை இந்த ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக திணைக்களத்தின் பொது முகாமையாளர் N.J.இந்திபொலகே தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here