follow the truth

follow the truth

May, 22, 2025
HomeTOP2"நான் 69 இலட்சம் காலகன்னி அமைப்புக்கு எதிராகப் போராடிய பெண்"

“நான் 69 இலட்சம் காலகன்னி அமைப்புக்கு எதிராகப் போராடிய பெண்”

Published on

சிறைக்குச் செல்ல எனக்கு பயம் இல்லை. ‘சிறை கூடுகள்’ இருப்பது என்பது மக்கள் சிறைக்குச் செல்வதற்காகத்தான். சிறையில் இருந்து புத்தாண்டினை கொண்டாடுவேன். தலைமறைவாக உள்ளதாக சி.ஐ.டி. தெரிவித்தனர். தமிதா தலைமறைவாக இருக்கக்கூடிய பாத்திரம் அல்ல என நடிகை தமித அபேரத்ன தெரிவித்திருந்தார்.

69 இலட்சம் வாக்குகளைப் பெற்ற கேடுகெட்ட முறைக்கு எதிராகப் போராடிய பெண் என சந்தேகநபர் தமிதா அபேரத்ன நேற்று (04) ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

நிதி மோசடி தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்றைய தினம் (04) கைது செய்யப்பட்ட பிரபல நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவரும் இன்று (05) கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

இந்த நிதி மோசடி சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சந்தேகநபர் தமிதா அபேரத்னவையும் அவரது கணவரையும் நேற்று (04) காலை கோட்டை நீதிமன்றத்திற்கு வந்த போதே கைது செய்துள்ளனர்.

பின்னர், வாக்குமூலத்தைப் பெறுவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத் தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். நிதி மோசடி சம்பவம் தொடர்பில் தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தப்பட உள்ளதால், அவர்களை நேற்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த முடியவில்லை என குற்றப் புலனாய்வு திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.

கொரியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஒருவரிடமிருந்து மூன்று இலட்சம் ரூபா பணத்தைப் பெற்றுக்கொண்டு அந்தத் தொகையை மோசடி செய்ததாக எழுந்த முறைப்பாட்டின் அடிப்படையில் தமிதா அபேரத்னவும் அவரது கணவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாகன விபத்துக்கள் ஏற்படக்கூடிய பகுதிகளில் பாதுகாப்பு வேலிகளை அமைக்க நடவடிக்கை

மத்திய மாலைநாட்டில் வாகன விபத்துக்கள் ஏற்படக்கூடிய பகுதிகளில் வீதிகளின் இருபுறமும் பாதுகாப்பு வேலிகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக வீதி...

மலையக ரயில் சேவையில் தாமதம்

நானுஓயா மற்றும் அம்பேவெலவிற்கும் இடையில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளமை காரணமாக மலையகப் பாதையின் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக...

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு 10 மணிநேர நீர் வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நாளை மறுதினம்(23) நீர் விநியோகம் தடைப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும்...